Thursday, May 28, 2009

தமிழ்க் கூட்டமைப்பு தமிழரைக் காக்குமா ? தட்டிக் கழிக்குமா ?

எல்லாமே எங்களை விட்டுப் போனது போன்றதொரு நிலமையில் இன்று தமிழினத்தின் தலைவிதி தெருவில் வந்து நிற்கிறது. இன்னும் கனவுகளோடு அந்த மக்களைச் சாகும்படி வீராவேசப் பேச்சுகளும் விவாதங்களினதும் தொடர்ச்சியாக ஆய்வுகளும் அறிக்கைகளும் மாறிமாறி அலசப்பட்டுக் கொண்டுதானிருக்கிறது.
மாவிலாற்றில் பிடித்த சனியன் முள்ளிவாய்க்கால் வரையும் துரத்திப்பபோய் 3லட்சடம் வரையான பொதுமக்களை அகதிகளாக்கியும் பல்லாயிரக்கணக்கில் பலியெடுத்தும் தனது கோரத்தைத் தீர்த்து முடித்திருக்கிறது. தன்னினம் விடுதலைபெற வேண்டுமென்ற கனவோடு போராளிகளான ஆயிரமாயிரம் போராளிகளைக் களப்பலியெடுத்தும் கடைசியில் சரணடைய வைத்தும் உலக வல்லரசுகள் தங்கள் வஞ்சத்தைத் தீர்த்துக் கொண்டது.

வவுனியாவுக்குள்ளும் யாழ்ப்பாணத்துக்குள்ளும் ஏன் இலங்கையின் பல பகுதிகளுக்குள்ளும் அமைக்கப்பட்டுள்ள சிறைகளில் சித்திரவதைக் கூடங்களில் தமிழினம் இனியொரு ஐம்பது ஆண்டுகள் நிமிரமுடியாதபடி நிலமை வந்து நிற்கிறது. தாய் வேறு குழந்தைகள் வேறு தந்தை வேறு என்ற வகைபிரித்தலில் அனாதைகளாய் போன அத்தனையாயிரம் அப்பாவிகளையும் அடைத்த முகாம்களில் எங்கே முழுமையான நிம்மதியை அவர்கள் தேடுவார்கள்.

புனர்வாழ்வு என்ற பெயரில் ஆயிரமாயிரம் போராளிகள் முன்னாள் போராளிகள் என வகைபிரிக்கப்பட்டு வதைபடும் துயரம், தனது மக்களுக்காகப் போராடிய தெய்வங்கள் இன்று அடுத்த நேரச்சோற்றுக்குத் தட்டேந்தும் நிலைக்கு வரக்காரணமான அனைத்தையும் அனைவரையும் வெறுக்கிறோம்.

இப்போது எம்மிடம் மிஞ்சியிருப்பது ? துயரமும் கண்ணீரும் , இயலாமையும் , இனி எஞ்சியோரது வாழ்வுக்கான வழியொன்று திறபட வேண்டும் என்பதேயாகும். இந்த வழியின் மூலம் எங்கே ? அது இனி என்னத்தைத் தமிழினத்துக்குச் செய்யப்போகிறது ? என்றெல்லாம் ஏகப்பட்ட கேள்விகள் எழுந்து தொலைகிறது.

ஆயுதங்கள் மெளனித்தனவா ? மெளனிக்க வைக்கப்பட்டனவா ? எதுவோ இனி ஆயுதங்களால் எங்களுக்கு ஒன்றும் வேண்டாம். ஆயினும் நாம் மீண்டும் எழுவோம் ஆழுவோம் என்ற கனவில் எஞ்சிய உயிர்களையும் பலியெடுக்க இனி அனுமதிக்க முடியாது. யுத்தம் எங்களைக் களைக்க வைத்துவிட்டது. சிறுபான்மையினம் இன்று சின்னாபின்னமாய் நிமிரமுடியாமல் தனது வளத்தை வாழ்வை இழந்து போயுள்ளது. இனியொரு யுத்தம் இனியொரு அழிவு வேண்டாம். அதைத்தாங்கும் வல்லமையில்லை எங்களிடம். எல்லோரும் சொல்வதுபோல் நாங்கள் தோற்றுப்போனோம். எங்கள் தோழர்கள் வஞ்சனையால் வன்கொலை புரியப்பட்டார்கள். மலைகளாய் நாம் நம்பிய இமயங்களையெல்லாம் இறுதிக்கணம் வரை உயிருக்காய் இறைஞ்ச வைத்து அழித்து விட்டார்கள். யுகங்களுக்கும் மாறாத வடுவாய் எங்கள் மனங்கள் ரணமாய்ப்போயுள்ளது.

இனியென்ன செய்வது ?
மக்களின் பணியாளர்களைத் தேடித் தேடி எனது மக்களைக் காக்க என்ன செய்யப்போகிறீர்கள் ? என அவலப்படும் மக்களுக்கான ஆதரவுகளைத் தேடுகிறோம்.
மக்கள் பிரதிநிதிகள் அக்கறையாளர்கள் அனைவரும் ஏதாவது செய்ய வேண்டுமென்றே முனைப்போடு உள்ளதாகச் சொல்கிறார்கள். ஆனால் அந்த முனைப்பை முளையில் கிள்ளிவிட இன்னும் பல மூதேவித்தலைகளும் மூத்ததுகளும் தடைக்கற்களாகவே இடையில் வந்து செருகுப்படுவதால் ஆர்வலர்கள் பின்வாங்குகிறார்கள். இன்னும் மந்தைகளாய் மக்களை மேய்க்கப் புலத்தில் அதிகாரம் பண்ணும் அடங்காப்பிடாரிகளை நம்பி இனியும் எமது மக்களைப் பலிகொடுக்கமாட்டோம். முதலில் இந்தப் பெருச்சாளிகளை எம்மிலிருந்து பிரித்து ஒதுக்குவோம்.

மக்களுடன் நின்று இயங்கக்கூடிய வழிகளைத் தேடியொரு மனிதாபிமானப் பணிகளுக்கான பாதைகளைத் திறந்து விடவேண்டியது முக்கியமாகும். இந்தப்பணியைச் செய்ய இப்போதைக்கு எங்களுக்கு ஒரு துடுப்பாக இருப்பது தமிழ்க்கூட்டமைப்பு மட்டுமே. கூட்மைப்பில் உள்ள 22பாராளுமன்ற உறுப்பினர்களும் இதுவரை ஏதோ இருக்கிறோம் என்று இருந்த நிலைமாறி இனி மக்களுக்கான விடிவொன்றை வழிவகுக்க வேண்டிய மாபெரும் கடைமையைப் பொறுப்பெடுக்க வேண்டும். புலம்பெயர் மக்களின் பணத்தில் அறிக்கையும் , கண்டனமும் விடும் அகதிகளான பாராளுமன்ற உறுப்பினர்களைத் தவிர்த்துவிட்டு மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஏனையோர் உடனடித் தேவைகளை நிறைவேற்ற முன்வரவேண்டும்.

கூட்டமைப்பினர் ஏதிலியான எமது மக்களுக்கு ஒரு விடிவைப்பெற்றுப் கொடுக்க உடனடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இதுவரை காலமும் மக்கள் பிரதிநிதிகள் என்ற பெயருக்குள் மக்களுக்கான எந்தவிதமான செயற்பாடுகளையும் செய்யாமல் ஐரோப்பிய ஊலாவந்தும் தங்களையும் தங்கள் குடும்பங்களையும் ஐரோப்பாவுக்கும் சிங்கப்பூருக்கும் இந்தியாவுக்கும் இடம்மாற்றிய சுயநலமக்கள் பிரதிநிகைளைத் தள்ளி வைத்துவிட்டு உரிமையுடன் தங்கள் பணியை ஆரம்பிக்க வேண்டும்.

கூட்டமைப்பினர் இன்னும் புலத்துப்புண்ணியர்கள் அனுமதித்தால் தான் தமிழினத்தைக் காப்போம் எனக் காத்திருக்காமல் உங்கள் கடமையை ஆரம்பியுங்கள். உங்களுக்கான ஆதரவுகளைத் தரக்காத்திருக்கிறோம்.

நட்டாற்றில் நமது இனம் சாக நிம்தியாய் எங்களால் இருக்க முடியவில்லை. ஊர் உறவுகள் முழுவதும் இடைத்தங்கள் முகாம்களிலும் , புனா்வாழ்வு முகாம்களிலும் புழுக்கள் போல் நசிபட புலத்திலிருந்து புதுயுகம் படைப்போமென்று பூச்சாண்டி காட்ட முடியாது என்ற உண்மையைப் புரிந்து கொள்ளுங்கள். அடுத்த தேர்தல் நெருங்குகிறது. தமிழ்க்கூட்டமைப்பு தனது முழுமையான பலத்தையும் கையில் எடுக்க வேண்டிய தருணமிது. தமிழின விதி உங்கள் கையில் தான் தொங்குகிறது.

உங்களுக்குள் உள்ள முரண்கள் மனத்தாங்கல்களை மறந்து உங்கள் போன்று தமிழினத்தைத் தாங்கும் தூண்களையெல்லாம் உங்களோடு உள்வாங்குங்கள். மாற்றுக்கட்சி முரண்பாடு கொள்கைக்கட்சி முரண்பாடுகளை மூட்டை கட்டி வைத்துவிட்டு எங்கள் மக்களைக் காப்பாற்றுங்கள். சங்கரியின் கையிலோ டக்ளசின் கையிலோ சித்தார்த்தன் கையிலோ சிறீதரன் கையிலோ தமிழனின் விதி கைமாற வேண்டாம்.

உங்களையே நம்புகிறோம் எங்கள் மக்களுக்கான மறுவாழ்வைக் கொடுங்கள். உலக மூலையெங்கும் இருக்கும் தமிழினத்தை உங்களோடு சேருங்கள். அடுத்த தேர்தலை தமிழினத்துக்கான மோட்சமாக மாற்றுங்கள். உங்களையே இறுதியாய் நம்புகிறோம். எங்கள் மக்களைக் காப்பாற்றுங்கள். அவர்களுக்கான எதிர்காலம் வாழ்வு எல்லாம் உங்கள் கையில் தந்துவிடுகிறோம். துணையாய் நாங்களிருப்போம். தடைகளை உடையுங்கள் என்று கேட்கவில்லை. எம் மக்களின் மறுவாழ்வை உறுதிப்படுத்துங்கள்.

அக்காச்சி பிள்ளைகளைப்பறி கொடுத்தாளாம் , மாமாவின் மனைவி சிதறிச் செத்தாளாம் , மருமகள் முடமாகிப்போனாளாம் , மச்சான் எறும்பு மொய்த்து இரத்தத்தில் கிடந்தானாம் என்று உறவுகளின் துயர் எங்களை அணுவணுவாய் கொல்கிறது. போரால் தாயகம் சிதிலமானது. இங்கோ ஊரை உறவுகளை நினைத்து நாங்கள் மனநோயாளிகளாகிறோம். எம்மக்களைக் காப்பாற்றுங்கள்.
ஆண்டவனை இழந்து விட்டோம். அதற்கடுத்து உங்களைத் தான் நம்புகிறோம்.

28.05.09

11 comments:

கவிக்கிழவன் said...

supper

சாந்தி நேசக்கரம் said...
This comment has been removed by the author.
சாந்தி நேசக்கரம் said...

யாழ் கருத்துக்களத்தில் இக்கட்டுரைக்கான கருத்தாளர்களின் கருத்துக்கள் இங்கே பதியப்படுகிறது.

எழுதியவர் sivakumaran:-
முல்லைத்தீவில் சனங்களோடு இருந்த குற்றத்திற்காக தமிழ்க்கூட்டமைப்பாளார்களில�
� ஒருவர் 4ம் மாடியில் வைத்து விசாரணை செய்கிறார்கள். பல தமிழ்த்தேசிய கூட்டமைப்பினரை பயங்கரவாத சட்டத்தின் மூலம் தண்டிக்கப் போவதாக சிங்களம் வெறுட்டுகிறது. விரைவில் பாராளுமன்றத்தேர்தல் வைக்கவும் மகிந்தா விரும்புகிறார். தமிழ்க்கூட்டமைப்புக்கு தங்களைக் காப்பாற்றவே கடினம் போல கிடக்கிறது.

அவுஸ்திரெலியாவில் அபோரிஜினல் என்ற ஆதிக்குடிமக்கள் இருப்பது போல சிறிலங்காவில் அடிமையாகத் தமிழன் வாழப்போகிறான் என்பது தான் வேதனையான உண்மை. வெளினாடுகளுக்கு வந்த நாங்கள் தப்பிவிட்டோம்.

இப்படி எங்களை அனாதையாக்கிய கடவுளைக் கண்டால் சித்திரவதை செய்து கடவுளைக் கொல்வேன்.

சாந்தி நேசக்கரம் said...

யாழ் கருத்துக்களத்தில் இக்கட்டுரைக்கான கருத்தாளர்களின் கருத்துக்கள் இங்கே பதியப்படுகிறது.

எழுதியவர் sathiri :-
தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் இப்பொழுதுதான் வேகமாக இயங்க வேண்டிய காலகட்டம்.. ஆனால் அவர்களின் சத்தத்தையே காணேல்லை...

சாந்தி நேசக்கரம் said...

யாழ் கருத்துக்களத்தில் இக்கட்டுரைக்கான கருத்தாளர்களின் கருத்துக்கள் இங்கே பதியப்படுகிறது.

எழுதியவர் சபேசன்:-
கூட்டமைப்பினால் ஒன்றும் சாதிக்க முடியாது. விரைவில் கூட்டமைப்பு என்பதே இல்லாது போகும்.
இவர்களுக்கு ஏற்கனவே நிறையப் பிளவுகள். விடுதலைப் புலிகள் இருந்ததனாற்தான் ஓரளவு என்றாலும் அடக்க ஒடுக்கமாக இருந்தார்கள்.

விரைவில் இவர்கள் மீண்டும் தனிக் கட்சிகளாக மாறி விடுவார்கள். கூட்டமைப்புக்குள் உள்ள மக்களில் இருந்து தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள் நாட்டை விட்டு தப்பி ஓட வேண்டிய நிலையில் இருக்கின்றார்கள்.

மிச்சம் உள்ள இயக்கப் பிரதிநிதிகளும் (ரெலோ, ஈபிஆர்எல்எவ்) கட்சிப் பிரதிநிதிகளும் (தமிழரசுக் கட்சி) தங்களுக்குள் முரண்பட்டு பிரிந்து விடுவார்கள்: இவர்களுக்குள் ஏற்கனவே நிறையப் பிரச்சனைகள் இருக்கின்றன.

தமிழரசுக் கட்சி மீண்டும் ஆனந்தசங்கரியுடன் இணைந்து தமிழர் விடுதலைக் கூட்டணியாக மாறினாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

சாந்தி நேசக்கரம் said...

யாழ் கருத்துக்களத்தில் இக்கட்டுரைக்கான கருத்தாளர்களின் கருத்துக்கள் இங்கே பதியப்படுகிறது.

எழுதியவர் நிழலி :-
QUOTE (சபேசன் @ May 29 2009, 10:51 AM) *
கூட்டமைப்பினால் ஒன்றும் சாதிக்க முடியாது. விரைவில் கூட்டமைப்பு என்பதே இல்லாது போகும்.
இவர்களுக்கு ஏற்கனவே நிறையப் பிளவுகள். விடுதலைப் புலிகள் இருந்ததனாற்தான் ஓரளவு என்றாலும் அடக்க ஒடுக்கமாக இருந்தார்கள்.
---------------------------------

ஜீரணிக்க முடியாத உண்மை.... வினோ வில் இருந்து ஆரம்பித்து அடைக்கலம் வரை ஒன்றாக வைத்திருக்க புலிகளின் அரசியல் பிரிவு மேற்கொண்ட முயற்சிகளை அறிந்தவர்களுக்கு தான் தெரியும்...

சாந்தி நேசக்கரம் said...

யாழ் கருத்துக்களத்தில் இக்கட்டுரைக்கான கருத்தாளர்களின் கருத்துக்கள் இங்கே பதியப்படுகிறது.

எழுதியவர் nedukkalapoovan:-

மரணத்துக்கும் அஞ்சாத நெஞ்சுறுதியும் கொள்கைப் பிடிப்பும் கொண்ட விடுதலைப் புலிகளோடு.. கூட்டமைப்பில் உள்ள அனைவரையும் ஒப்பிடக் கூடாது. ஆனால் கூட்டமைப்புக்குள்ளும் நெஞ்சுறுதியுள்ள சிலராவது இருப்பர். அவர்களை மக்கள் அரவணைத்துச் செல்ல வேண்டும்..! தமது ஆதரவை வழங்க வேண்டும்..!

இளைய அப்துல்லாஹ் said...

என்ன எல்லாம் டொச்சில் இருக்கு ஒண்டும்விளங்குதில்லை

---------------------------------
''அதற்கடுத்து உங்களைத் தான் நம்புகிறோம்''

இதனைத்தான் இப்பொழுது ஒரு நிகழ்ச்சியில் பேசிவிட்டு வந்து உட்கார்ந்திருக்கிறேன்

சாந்தி நேசக்கரம் said...

இளைய அப்துல்லாஹ் hat gesagt...

என்ன எல்லாம் டொச்சில் இருக்கு ஒண்டும்விளங்குதில்லை

---------------------------------
''அதற்கடுத்து உங்களைத் தான் நம்புகிறோம்''

இதனைத்தான் இப்பொழுது ஒரு நிகழ்ச்சியில் பேசிவிட்டு வந்து உட்கார்ந்திருக்கிறேன்.
___________________________________
வணக்கம் அனஸ்,
டொச்சில் இருப்பதை பொதுமொழிக்கு மாற்றுகிறேன். இதுவரை கவனிக்காமல் விட்டுவிட்டேன்.

நம்புகிறோம் எம்மக்களுக்கு நன்மையே நடக்க வேண்டுமேன. இன்னும் கனவுகளில் வாழ்விக்கும் கனவான்களின் கண்களையும் திறக்க வேண்டிய கடமையுள்ளது.

நம்புவோம்.

சாந்தி

ஒரு அகதியின் நாட்குறிப்பு !!! said...

தோழருக்கு,
தங்கள் மேற்படி கருத்தாடலின் சில பாகங்களை என் நாட்குறிப்பில் உங்கள் பெயரில் சேர்த்துள்ளேன்.நன்றி. எல்லாம் இழந்து சூனியமாய் நிற்கும் என் ஈழ மக்களுக்கு உங்கள் எழுத்துக்கள் வழிகாட்டட்டும்.
தமிழ்சித்தன்

சாந்தி said...

யாழ் கருத்துக்களத்தில் இக்கட்டுரைக்கான கருத்தாளர்களின் கருத்துக்கள் இங்கே பதியப்படுகிறது.

எழுதியவர் Nellaiyan:-

QUOTE
தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் இப்பொழுதுதான் வேகமாக இயங்க வேண்டிய காலகட்டம்.. ஆனால் அவர்களின் சத்தத்தையே காணேல்லை...


இல்லை ........ கேள்விப்பட்ட அளவில் சில வேலைகளை செய்ய வெளிக்கிட்டார்களாம்! ஆனால் அதனை குழப்பி அடிக்க புலனாய்வுத்துறை உறுப்பினர் எனும் பெயரில் தமிழ்நெட்டில் வந்த அறிவிப்பும் .... எல்லாவற்றையும் நிறுத்தி விட்டது. அவர்களும் உயிர்களுக்கு பயந்தவர்கள் தானே!!!!!!!!

இக்கால கட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பை தற்காலிகமாவது ஆதரிக்க தவறுவோமாயின் .... டக்லஸ், கருணா போன்ற பிணந்தின்னிகளின் கைகளில் தமிழ்த்தலைமையை ஒப்படைத்து விடுவோம்!! .. பின்பு ...........
*********************************************