Saturday, June 20, 2009

உருத்திரகுமாரைப் புறக்கணியுங்கோ இல்லாட்டி நீங்க துரோகியள்



இதென்ன இழவு வில்லங்கமெண்டு யோசிக்கிறியளெல்லோ. ஏற்கனவே புலத்து ஏகபிரதிநிதிகளையும் வணங்காமண்ணைக் கல்கத்தாவில உடைக்கிறதையும் உடைச்சுச் சொன்னதில கடுப்பேறிக் கன அவதாரங்களில வெருட்டு மிரட்டு விடுகிற சாமிகளே ! நீங்கள் துரோகியேண்டாலும் சரி றோவெண்டாலும் சரி உண்மைகள் வெளிவருவதை நீங்கள் நேத்தி வைச்சுக் கும்பிடுற கடவுளுகளாலையும் இனிக்காப்பாற்றேலாது.

உங்களுக்கு இன்னும் ஒரு விசயம் விளங்குதேயில்ல. உளவாளி எப்பவும் நல்லவனாகவே நடிப்பான். எங்களைமாதிரி உங்களைப்போல உருவேறி உண்மையளைச் சொல்றவையளாக இருக்காயீனம். உங்களை எங்களையெல்லாம் உளவாளியா வைச்சிருந்தா எந்த உளவு அமைப்பும் உளவு பாக்கேலாது மாடுகட்டி உழவுசெய்யத்தான் முடியும்.

சரி இனி வியசத்துக்கு வாறன். புறநிலை அரசை உருவாக்கும் முயற்சியில் திரு.பத்மநாதன் அவர்களினால் தேர்வு செய்யப்பட்ட உருத்திரகுமாரைப் புறக்கணிக்கட்டாம். இதை நான் சொல்லேல்ல. இது புலத்தில இப்ப குறுநிலமன்னர்களாக விளங்கும் தலைகளிடமிருந்தே வருகிறது.இன்னும் ஆயுதப்போராட்டம் செய்து தமிழீழ அரசை நிறுவுவோம் என்று இங்கிருந்து குரல் விடுவோரே ! இந்தக் கனவுகளையும் உங்கள் கற்பனைகளையும் போரால் பாதிக்கப்பட்டவர்களாலோ மற்றும் அந்த மக்களில் கரிசனையுள்ளோராலோ நினைத்தும்பார்க்க முடியாத ஒன்று என்ற உண்மையை உணர்ந்து கொள்ளுங்கள்.

‘வணங்காமண் பேரீச்சம்பளத்துக்குப் போகுது‘ என்று சொன்னதுக்கு அடுத்து யேர்மனியிலயிருந்து வன்னிக்கப்பல் விடவுள்ள வன்னிரெக்கிலிருந்து சில நாட்களுக்கு முதல் ஒரு தொ(ல்)லைபேசி. அழைச்ச அண்ணாச்சி வன்னிரெக்கின் உசிர். (கேக்கப்படாது மற்றவை தாங்கிறதெல்லாம் என்னெண்டு) பென்சன் எடுத்திட்டு ஊருக்கு சமாதான காலத்தில் உலாத்துப்போட்டு வந்து தாயகம் , தேசியம் , சுயநிர்ணயம் என்றெல்லாம் ஊதின சங்கு இவர்.

சமாதானகாலம் வந்ததும் இவர்கள் கனவு கண்டது என்னெண்டா…., கெதியில தமிழீழம் வந்திடும் பென்சன் எடுத்திட்டு வன்னியில போய் புலிகளுக்கு ஆலோசகர்களாகவும் , அமைச்சர்களாகவும் , புனர்நிர்மாண நிறுவனர்களாகவும் ஆகலாம் என்றதுதான். அந்தக்கனவிலை அந்த மண்ணின் நிமிர்வு தியாகம் உழைப்பு எல்லாத்தையும் மண்மூடிப்புதைக்கும் வரை இந்த ஆலோசகர்கள் ஆங்கிலம் படித்த அதிமேதாவிகள் ஒருவரும் விஸ்கியில மூழ்கியிருந்த தலையை நிமித்தவேயில்லை. முள்ளிவாய்க்காலில் எங்கள் முதிசங்கள் உயிர்களை இழக்கும் வரை இவர்களுக்கு ஒண்டுமே தெரியேல்ல.

3தாசாப்தங்கள் தான் நேசித்த தலைவனைப் போராளிகளை இழந்த உண்மையை வெளியில் சொன்னார், விடுதலைப்புலிகளால் உலகத்துக்குத் தெரிவிக்கப்பட்ட பத்மநாதன் அவர்கள். எந்த மக்களுக்காகத் தங்களைக் கருக்கினார்களோ , தியாகங்களைச் செய்தார்களோ அந்த 30ஆயிரத்துக்கும் மேலான மாவீரர்களின் கனவெல்லாம் பொடியான உண்மையைச் சொன்னதற்காக இந்த ஆங்கிலம் படித்த மேதாவிகளாலேயும் இந்த மேதாவிகளின் குரல்களை நம்பிய அப்பாவிகளாலும் பத்மநாதன் துரோகியாக்கப்பட்டார். அத்துடன் முடியவில்லை துரோகப்பட்டம். அவரது செய்தியை வெளியிட்ட ஊடகர்களை , ஊடகங்களையெல்லாம் (குறிப்பாக ஜீ.ரீ.வி) ஒதுக்கும் முயற்சியிலும் இறங்கிவிட்டது இந்த இயலாத இயங்கிகள்.

இதுவரையான தவறுகள் தீமைகள் யாவையும் சீர்தூக்கிப்பார்த்து பத்மநாதன் அவர்களால் உருவாக்கப்பட்ட புறநிலை அரசில் இடம்பெற்றுள்ளவர்கள் வெறும் பொழுது போக்கிகள் போலத்தெரியவில்லை. எல்லோருமே பேராசிரியர்கள் கல்விமான்கள். ஆனால் இத்தகையதொரு கூட்டணியை இதுவரைகாலமும் வைக்கல்பட்டடையைக் கிழறிய சிங்கங்கள் சீறிக்கொண்டு எதிர்க்கின்றனர். இக்குழுவின் பொறுப்பை வகிக்கும் சட்டநிபுணர் உருத்திரகுமார் அவர்களை வேண்டியபடிக்கு விமர்சிக்கின்றனர். தொ(ல்)லைபேசியில் உருத்திரகுமார் பற்றி ஊதித்தள்ளியவர் சொன்னதிலிரந்து சிலவற்றைக் கீழே தருகிறேன்.

வணங்காமண்ணை பேரிச்சம்பளத்துக்குப் போகுதெண்டு நக்கலடிச்சிட்டியள். அதுகூடப்பறவாயில்ல அதை ஏற்பாடு செய்த முக்கியமான ஆக்களுக்கெல்லாம் எப்பிடி அனுப்புவீங்கள் ?(சிவனறிய அந்த முக்கியங்களை அந்த அண்ணாச்சி சொன்னாப்பிறகும் ஆரேண்டே அவையளை எனக்குத் தெரியாது) எங்களுக்குத் தெரியும் கப்பல் போகாதெண்டு ஆனால் நாங்கள் அனுப்பினனாங்கள். ஏனெண்டா எங்கடை பலத்தை உலகத்துக்கும் மகிந்தவுக்கும் காட்ட. கப்பல் போகுமெண்டு நீங்கள் நம்பினதுக்கு நாங்கள் பொறுப்பில்ல…. அங்கை வணங்கா மண்ணில வாற அரிசியைச் சாப்பிடச் சனம் இருக்கேல்ல. போராட்டமெண்டா இதெல்லாம் வரும்.

சரி எங்களைக் கிழிச்சியள். இப்ப உருத்திரகுமாரை என்ன செய்யப்போறியள் ? உருத்திரகுமார் தலைமை தாங்கினா தமிழன் இன்னும் முப்பது வருசம் உய்யமாட்டான். உருத்திரகுமார் இதுவரை சட்டநிபுணத்தால என்ன புண்ணாக்குப் புடுங்கினவர் ? அகதியளுக்கு கேஸ் செய்யிறவர். அவராலை எப்பிடித் தமிழீழப்புறநிலையரசை நிறுவ ஏலும் ? பத்மநாதன் துரோகி. ரண்டு துரோகியளின்ரை கையிலயும் தமிழன்ரை விதி நாறப்போகுது. அவரைவிடப்படிச்சவையள் எவ்வளவு பேர் இருக்கினம் எங்களுக்குள்ள (அவர்தன்னையும் படிச்ச லிஸ்டிலை சொல்றார்) அவையை ஏனுந்தப் பத்மநாதன் தெரிவு செய்யேல்ல ? (வெற்றிடங்கள் இன்னும் உள்ளதாக பத்தநாதன் உருத்திரகுமார் கூட்டமைப்பால் தெரிவிக்கப்பட்டுள்ளது. தங்களால் இயன்றவர்கள் இணையலாம்) நாங்கள் விடமாட்டோம். உவங்களை நாறடிப்போம். நான் எங்கடை பாதிரியாருக்குச் சொல்லீட்டன் உடனடியா அறிக்கைவிடச்சொல்லி. எங்களிட்டை ஆக்கள் இருக்கினம். எங்களுக்குச் சனத்திட்டைச் செல்வாக்கிருக்கு. உருத்திரகுமார் பேச்சுவார்த்தையளுக்குப் போய் பிரபாகரனோடை படமெடுத்தவுடனும் தலைவனாகலாமோ ? (இன்னும் தலைவர் என்ற வார்த்தையை விட்டு இறங்க முடியவில்லை. அந்தளவுக்கு எங்களுக்குள் நேசிக்கப்படும் தலைவன் மீதே பாயும் இந்தப் படித்தவர்கள் நிலமை இப்பிடியிருக்கு)
இந்தா யேர்மனிலயிருந்தும் கப்பல் விடப்போறொம். அதுகும் போகாதெண்டு தெரியும். ஆனா அனுப்பப்போறோம்.

இனி நான்,
ஆரந்த முக்கியமானவை ? முக்கியமெண்டா கொம்போ எனக்கவையள் ? உங்கடை குறுநிலமன்னர்களுக்குச் சொல்லி வையுங்கோ. உண்மைகள் கசக்கும் உறைப்பாச் சாப்பிடச் சொல்லி…நீங்கள் சாதாரணைமாய் உடைக்கவோ நாங்கள் காசு தந்தனாங்கள் ? நாங்கள் நம்பினோம். எங்கடை சனத்தைக் காக்குமெண்டு நம்பினோம்.

சரி உருத்திரகுமார் தகுதியில்லாத ஆள். பத்மநாதன் துரோகி. நீங்கள் தியாகியள் நடத்துங்கோவனண்ணை. அதுக்கு எங்களுக்கு அனுமதி வரேல்ல ? அது எங்கையிருந்தண்ணை வரும்? நாட்டிலையிருந்து வரும். எந்த நாட்டிலையிருந்தண்ணை வரும் ? உது குதர்க்கம். அண்ணாச்சிக்கு குருதியழுத்தம் கூடீட்டுது இந்த லூசோடை கதைச்சு., தொ(ல்)லைபேசி கட். இவர்களையெல்லாம் இன்னும் தலைவர்களாக வைத்துக் காரியம் செய்யாட்டி எல்லாரும் துரோகிகள் இவர்கள் பட்டியலில்.

இத்துடன் நிற்காமல் லண்டனில் ‘தமிழீழ மக்களவை ` என்ற ஒன்றையும் உருவாக்குவதாக அறிக்கைவிட்டு பற்றிமாகரன் (பெயருக்குப் பின்னால் தமிழிலும் ஆங்கிலத்திலும் கன பட்டங்களை வைச்ச நிமிரமுடியாமல் நிக்கிற மனிதனைப் பிடிச்சு ஆய்வும் செய்விச்சாச்சு) அவர்களை வைத்து அடுத்த குழப்பக்கூட்டணியை நிறுவுதற்கான பின்கதவு அலுவல்கள் அவசர அவசரமாக ஆரம்பித்து விட்டார்கள் இந்தப் படித்தவர்கள். பாவம் பற்றிமாகரன் அவர்கள் இந்த உசுப்பிகளின் உசுப்பலைக் கேட்டு “தமிழீழ மக்களவை” குறித்து ஒரு பார்வை. சூ.யோ.பற்றிமாகரன். என்று பார்வையும் பார்த்திட்டார்.இதை்தான் சொல்றது போல வைக்கல்பட்டடைநாய்க்குணமெண்டு…??????

ஊரேயில்லாமல் எங்கடை சனம் அகதி முகாமில அரியண்டங்களோடை வாழுதுகளெண்ட பெயரில சாக…., இன்னும் படிச்சவை பட்டதாரி அறிவாளியெண்டு மிஞ்சினதுகளுக்குப் பாற்சோறு குடுக்காட்டிலும் பறவாயில்லை. பாடைகட்டாமல் இருக்கமாட்டியளோ ? பால்குடுக்க இயலாமல் முகாம்களில் தாய்மார் தங்கள் குழந்தைகளை யாருக்கோவெல்லாம் கொடுக்கின்ற துயரம் தெரியுமா உங்களுக்கு ? இலையானுக்குள் அம்மையும் செங்கமாரியும் தோல்வியாதிகளும் வந்து சாகும் சனத்துக்கு பத்துச்சதம் செய்ய முடியாத உங்களால் “தமிழீழ மக்களவை“ உருவாக்கி என்ன மண்ணைப் புடுங்க முடியுமமெண்டு நினைக்கிறியள்?
போதும் விடுங்கோ. மிஞ்சின சனமாவது வாழட்டும். பத்மநாதன் உருத்திரகுமார் கூட்டணியின் செயற்பாடுகள் வெல்ல ஏதாவது சேந்து செய்ய முடிஞ்சா செய்யுங்கோ. கீரைக்கடைக்கு எதிர்க்கடை போட்டு நாறவைக்காதையுங்கோ தமிழரின் வாழ்வை. ஒரு கூட்டணிக்கு ஒத்துழைப்புக் கொடுத்து உயர்த்திவிடுங்கோ.

நீங்களெல்லாம் இதுவரையும் தமிழீழம் என்ற ஒரு தேச உருவாக்கத்துக்குத் தான் உழைச்சியளோ ? நடிச்சியளோ ? தெரியாது. உங்களால் முடியாததை யாரோ ஒருவர் செய்ய நினைக்கிறார். அதை முளையில் கிள்ளிவிடாமல் வளரவிடுங்கோ. உள்வீட்டுக் குழறுபடிகளால் ஒரு இனத்தின் வாழ்வை அழிக்காதையுங்கோ.

இதுவரைகாலம் புலிகள் மீது உலகம் தடைபோட்டதற்கான காரணங்கள் பல. ஆனாலும் புலிகள் என்ற சொல்லைத் தவிர்த்துவிட்டு ஒரு அரசியல் பாதையை தேர்ந்தெடுக்க முடியாது. காரணம் 30ஆயிரத்துக்கும் மேலான மாவீரர்களின் தியாகத்தையும் தமிழருக்கான ஓர் தேச உருவாக்கத்துக்கான பாதைகளையும் திறந்தவர்கள் விடுதலைப்புலிகள். உலகம் வெறுத்த அனைத்தையும் கைவிட்டு புலிகள் இப்போது அரசியல் வழியில் அடுத்த கட்டத்தை நகர்த்த இறுதிக்கள முனையில் இருந்து தலைமையினால் அறிமுகப்படுத்தப்பட்டவர் பத்மநாதன் அவர்கள். விடுதலைப்புலிகள் என்ற அமைப்பை அதன் கட்டுமானத்தை நம்பிய அனைத்து மாவீார்களுக்காகவும் அந்தப்பெயரிலேயே அடுத்த அரசியல் விடிவு தமிழினத்துக்குக் கிடைக்க வேண்டும்.

இதுவரை காலமும் இருந்தது போலன்றி இப்போது இவர்களால் முன்னெடுக்கப்பட்டுள்ள ‘புறநிலையரசு‘ ஏதோவொரு நம்பிக்கையைத் தருகிறது. அதை எப்படியும் குழப்பியே தீருவேன் என்று கங்கணம் கட்டி நிற்கும் அத்தனைபேரும் சிந்தியுங்கள். இந்தப் புறநிலையரசு எந்தளவு சாத்தியம் எதைச்செய்யும் என்பதை இப்போதைக்கு எதிர்வு கூறமுடியாவிட்டாலும் இவர்களது முயற்சியில் இதுவரையும் இல்லாத ஓர் பரந்துபட்ட செயலாக்கத்துக்கான வெளிச்சம் தெரிகிறது.

துரோகியென்ற சொல் அதிகபட்சம் ஒருவருக்கான தண்டனையான சொல். ஆனால் அதனை நீங்கள் உங்களைக் கேள்விகேட்போருக்கு , உண்மையைச் சொல்வோருக்கெல்லாம் கொடுத்து ஒட்டுமொத்தத் தமிழினத்தையும் நடுக்கடலில் தள்ளும் நிலைக்குள் தள்ளிவிடுகிறீர்கள். இதுவரைகாலம் சரியோ தவறோ தமிழீழவிடுதலையென்ற குரலுக்குப்பின்னால் நின்ற ஊடகங்கள் முதல் உள்ளவர்கள் எல்லோரையும் துரோகியாக்குவதில் எதைக் காணப்போகிறீர்கள் ? எல்லோரையும் இந்தியாட்டை விலைபோட்டினம் இலங்கையிட்டை விலைபோட்டினமெண்டு சொல்லிச் சொல்லியே மக்களைக் குழப்பாதீர்கள். நீங்கள் துரோகியாக்கிய யாரையும் எவரும் விலைக்கில்லை இலவசமாகவும் வாங்கமாட்டார்கள். இதையேன் புரிந்து கொள்ள மறுக்கிறீர்கள் ? உங்கள் யார் மீதும் எனக்குக் காழ்ப்புமில்லை கசப்புமில்லை. திரும்பத் திரும்ப நீங்களும் ஏமாந்து உங்கள் பின் நிற்பவர்களையும் ஏமாற்றுகிறீர்கள். இதைத்தான் விட்டுவிட வேண்டும் இனியாவது ஒற்றுமைப்பட்டு அவலத்தில் சாகும் 3லட்டசம் பேரும் மீட்கப்பட வேண்டுமென்பதற்காகவே திரும்பத்திரும்ப உங்களைப் பற்றி எழுதப்படுகிறது.

இறுதியாக ,
உளவாளிகள் எப்போதும் நல்லவர்கள் வடிவத்தில் தான் உலவுவார்கள். அவர்கள் உங்களைப்போல எங்களைப்போல உளறித்திரியார்கள். புரிந்து கொள்ளுங்கள். உள்ள ஒரு அமைப்பைப்பலப்படுத்துவோம். ஆளுக்கொரு அவை நாளுக்கொரு அறிக்கைவிட்டு இனியும் எங்கள் இனத்தை ஏமாற்றாது இருப்போம்.
19.06.09

30 comments:

Anonymous said...

That's it. Excellent sister.

ராஜ நடராஜன் said...

//இந்தப் புறநிலையரசு எந்தளவு சாத்தியம் எதைச்செய்யும் என்பதை இப்போதைக்கு எதிர்வு கூறமுடியாவிட்டாலும் இவர்களது முயற்சியில் இதுவரையும் இல்லாத ஓர் பரந்துபட்ட செயலாக்கத்துக்கான வெளிச்சம் தெரிகிறது.//

கருத்து மாறுபாடு தவிர்த்து ஒரு திசைக்கொள்கை நோக்கிப் பயணிப்பது அனைவருக்கும் பயன் தரும்.இதுவரை வரலாறு ஏராளமான விசயங்களை கண்முன் வைத்திருக்கிறது.கற்றுக்கொள்வதும் உட்பூசல் கொள்வதும் நம்மைப் பொறுத்தது.

வனம் said...

வணக்கம் அக்கா

ம்ம்ம்ம்....

இவையல் பற்றி நாம் நேற்று கதைக்கவில்லை, ஆனாலும் நீங்கள் சொல்வது சரிதான்

உட்பகையால் நாம் நம் இனத்தின் மீட்சியை தாமதப்படுத்துவது முறையாகாது.

கொஞ்சம் பிளாக்கரின் எழுத்துருவை மாத்துங்கொ, அவையள் யெர்மன் இருக்கு,

இராஜராஜன்

பி.புத்ரன் said...

அப்ப. கப்பல் போகாது என்று தெரிந்து கொண்டேதான் அனுப்பியிருக்கா... :(

அதை சொல்லியிருந்தா நாங்களும் நாலு செங்கட்டியை பார்சல்பண்ணி கொடுத்திருப்போமே...

கடைசியில எங்களை வைச்சு காமெடி பண்ணிட்டாங்களா..

Anonymous said...

அட பவியளா கப்பல் போகதெண்டு தெரிந்தே கப்பல் அனுவாங்களாம்.. ஆயுதம் வாங்கி அனுப்ப இயலாதெண்டு தெரிந்தே ஆயுதத்துக்கும் காசு சேர்ப்பாங்களாம்..நாங்களெல்லாம் இளிச்சவாயராயிட்டமா??

சாந்தி நேசக்கரம் said...

Blogger ராஜ நடராஜன் said...

// கருத்து மாறுபாடு தவிர்த்து ஒரு திசைக்கொள்கை நோக்கிப் பயணிப்பது அனைவருக்கும் பயன் தரும்.இதுவரை வரலாறு ஏராளமான விசயங்களை கண்முன் வைத்திருக்கிறது.கற்றுக்கொள்வதும் உட்பூசல் கொள்வதும் நம்மைப் பொறுத்தது.

June 21, 2009 1:52 AM //
ஒரு திசைக்கொள்கையையே எல்லோரும் விரும்புகிறோம்.வரலாறுகளிலிருந்து கற்கவேண்டிய கற்ற யாவையும் தவறவிடுகிறோமோ என அச்சமாக இருக்கிறது. இப்போதைய அடிபிடிகள்.

நன்றிகள் ஐயா தங்கள் கருத்துக்களுக்கு.

சாந்தி

சாந்தி நேசக்கரம் said...

//Blogger வனம் said...

வணக்கம் அக்கா

ம்ம்ம்ம்....

இவையல் பற்றி நாம் நேற்று கதைக்கவில்லை, ஆனாலும் நீங்கள் சொல்வது சரிதான்

உட்பகையால் நாம் நம் இனத்தின் மீட்சியை தாமதப்படுத்துவது முறையாகாது.

கொஞ்சம் பிளாக்கரின் எழுத்துருவை மாத்துங்கொ, அவையள் யெர்மன் இருக்கு,

இராஜராஜன்//
ஆம் இராஜன்,
நேற்று நாம் சந்தித்தபோது இவையெல்லாம் கதைக்க நேரமில்லாமல் போய்விட்டது.

போட்டிகள் இன்றி ஒரு பொதுமையின் கீழ் இணைவதே இப்போதைய தேவை.
உரியவர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.

சாந்தி

சாந்தி நேசக்கரம் said...

இராஜன் தற்போது எனது முல்லைமண் புளொக்கரை ஆங்கிலத்திற்கு மாற்றியுள்ளேன். இனிமேல் சிரமம் இருக்காது என நம்புகிறேன்.

நன்றி.

சாந்தி நேசக்கரம் said...

Anonymous பி.புத்ரன் said...

அப்ப. கப்பல் போகாது என்று தெரிந்து கொண்டேதான் அனுப்பியிருக்கா... :(

அதை சொல்லியிருந்தா நாங்களும் நாலு செங்கட்டியை பார்சல்பண்ணி கொடுத்திருப்போமே...

கடைசியில எங்களை வைச்சு காமெடி பண்ணிட்டாங்களா..

June 21, 2009 3:04 AM
********************************************************************************************************
நம்பினோம் வணங்காமண் போகுமென்று. தெரிந்து தான் அனுப்பினோம் நம்பியது எங்கள் தவறு என்கிறார்கள். என்ன செய்ய ? நாங்களென்ன சொத்தையா வித்துக் கொடுத்தோம் ? நாளாந்த உழைப்பில் ஒரு பகுதியைத்தானெ குடுத்தமாமென்கிறார்கள். நாளாந்தம் உழைப்பதில் ஒரு யூரோ உழைக்க நாங்கள் சும்மாயிருந்து சுதிபண்ணுவதில்லையென்பதை உணரமாட்டார்கள் இவர்கள்.
நாளாந்த செலவில் ஒரு துளியைத்தான் கொடுத்தோம் வணங்காமண்ணுக்கு ஆனாலும் சிறுதுளி பெருவெள்ளமாகியதை இலகுவாக உதறிவிட எண்ணும் மனிதரை என்ன செய்வோம் ?

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
Anonymous said...

வீட்டில் சமைச்சக் கொடுத்திட்டு இரு அதைவிட்டுவிட்டு எங்களுடன் மோதவராதே. செத்துப்போக விருப்பம் என்றால் எழுது. எல்லாரையும் எழுதி இப்ப பத்மநாதனுக்கும் உருத்திரகுமாருக்கும் ஆதரவு செய்யப்போகிறாயா ? அவங்கள் கையில் தமிழீழம் எடுத்துத்தருவதை பார்க்க தமிழர் சாகட்டும் பறாவயில்லை.

Anonymous said...

எவண்டா அவன் ஓசில அடுத்தவனுக்கு வைப்பாட்டி பிடிச்சுக்குடுக்கிறது. ஏண்டா எப்பவுமே ஆம்பிளைதானாடா ரெண்டு
வச்சுக்கலாம்? பொம்பிளை வைப்பாட்டன் வச்சுக்கொள்ள கூடாதா? உண்மை வெளில வாறது உனக்கெல்லாம் கஷ்டமா இருக்கா?
சனங்கள் இனி உங்களிடம் ஏமாற விட முடியாது. இதுக்கே இப்பிடி எண்டா இனி வர இருக்கிறது உங்களை உடுக்கு எடுத்து ஆட வக்கப்போகுது. சாந்தி, நீர் வீட்டிலை சமைக்காட்டாலும் பரவாயில்லை. டேக் எவே எடுத்து குடுத்துப்போட்டு இவேன்ர வண்டவாளத்தை வெளியில கொண்டு வாரும்.

"அவங்கள் கையில் தமிழீழம் எடுத்துத்தருவதை பார்க்க தமிழர் சாகட்டும் பறாவயில்லை."
இப்ப தானே சாக்குக்குள்ள இருந்த பூனைக்குட்டி வெளில வருது.
இப்பிடித்தானா அந்த வன்னி மக்களை எல்லாம் சாக்காட்டினது?
-வியாளி

பதி said...

காலத்தின் தேவையை உணர்த்துகின்றது உங்களுடைய அலசல்...

//துரோகியென்ற சொல் அதிகபட்சம் ஒருவருக்கான தண்டனையான சொல்.//

எனக்கு தெரிந்தவரையில் தமிழீழப் போராட்டத்தைத் தவிர்த்து வேறு எவரும் இந்த அளவிற்கு இந்தச் சொல்லை உபயோகப்படுத்தியிருபார்களா என்பது சந்தேகமே....


//நீங்கள் துரோகியாக்கிய யாரையும் எவரும் விலைக்கில்லை இலவசமாகவும் வாங்கமாட்டார்கள்.//

:)

கிருஷ்ணா said...

போகிற போக்கில் புலம்பெயர் தமிழர்களில் தமிழ்த்தேசியப் பற்றாளர்களை விடவும் துரோகிகள் அதிகமாகிவிட்டார்கள் போல?

//உங்களால் முடியாததை யாரோ ஒருவர் செய்ய நினைக்கிறார். அதை முளையில் கிள்ளிவிடாமல் வளரவிடுங்கோ//

யாரோ செய்ய நினைப்பதுதான் இங்கு பிரச்சனையே...

Jeyapalan said...

I don't understand anything here. "Kuddaiyaik kuzhappaamal summa irungko"

எவனோ ஒருவன் said...

அற்புதமான பதிவு, யதார்த்தங்களை புரிந்து கொள்ள முடியாத மனோநிலையில் புலம் பெயர் தமிழர்கள் இருக்கிறார்கள்

சாந்தி நேசக்கரம் said...

காலத்தின் தேவையை உணர்த்துகின்றது உங்களுடைய அலசல்...

//துரோகியென்ற சொல் அதிகபட்சம் ஒருவருக்கான தண்டனையான சொல்.//

எனக்கு தெரிந்தவரையில் தமிழீழப் போராட்டத்தைத் தவிர்த்து வேறு எவரும் இந்த அளவிற்கு இந்தச் சொல்லை உபயோகப்படுத்தியிருபார்களா என்பது சந்தேகமே....


//நீங்கள் துரோகியாக்கிய யாரையும் எவரும் விலைக்கில்லை இலவசமாகவும் வாங்கமாட்டார்கள்.//

:)

June 22, 2009 2:33 PM
Delete
Blogger கிருஷ்ணா said...

போகிற போக்கில் புலம்பெயர் தமிழர்களில் தமிழ்த்தேசியப் பற்றாளர்களை விடவும் துரோகிகள் அதிகமாகிவிட்டார்கள் போல?

//உங்களால் முடியாததை யாரோ ஒருவர் செய்ய நினைக்கிறார். அதை முளையில் கிள்ளிவிடாமல் வளரவிடுங்கோ//

யாரோ செய்ய நினைப்பதுதான் இங்கு பிரச்சனையே...

June 23, 2009 11:31 AM
*********************************************

தேசப்பற்றாளர்களை விட தேசியத்துரோகிகள் பட்டம் இலகுவாக வழங்கப்படுகிறது புலத்தில்.

யாரோ செய்ய நினைப்பது நெஞ்சுக்கள் இடியென்றால் இயன்றவர்கள் செய்யலாம். அதுவுமில்லை இதுவுமில்லையென்று அடம்பிடித்து எல்லாவற்றையும் அழியட்டும் என்ற மனப்போக்கில் தலைமைப்பதவிகள் தறிகெட்டு நிற்கிறது. காலம் இதையெல்லாம் கவனிக்குமா ?

சாந்தி

Anonymous said...

"ஏசுவார்கள் எரிப்பார்கள்
உண்மையை எழுது
உண்மையாகவே எழுது" - யோகர் சுவாமிகள்

"எழுத்தாளனின் பணியென்ன அதில் என்னென்ன இடர்பாடுகளை எதிர்கொள்ள வேண்டிவரும் என்பது பற்றித் தெளிவாகத் தெரிந்த நிலையில் சுவாமிகள் கூறிய கருத்து அது.

ஒரு எழுத்தாளனுக்கு, சமூகச் சிந்தனையாளனுக்கு எதிர்ப்புக்கள் உருவாவது இயல்பானதே. அவற்றைத் தடுத்துவிட முடியாது. வேறு வகையில் கூறுவதானால் அத்தகைய எதிர்ப்புக்களே எழுத்தாளன் சரியான திசையில் பயணிக்கிறான் என்பதற்கான காட்டிகள் எனலாம்.

இதையொரு பத்திரிகையில் படித்தேன்.
அழுத்தங்கள் அச்சுறுத்தல்களுக்கு அடிபணியாமல் செல்லுங்கள் சாந்தி.

வரதா

Anonymous said...

நாடுகடந்த அரசு அமைவது பற்றி இன்று அமெரிக்காவின் கருத்தை யாராவது கேடடீர்களா ? தமிழர்கள் முதலில் ஒன்றுபட்டு நிற்க வேண்டும். அல்லாதுவிடில் உள்ள தமிழர்களை பலிகொடுக்க நேரிடும்.

சாந்தி நேசக்கரம் said...

கீழ்வரும் கடிதமானது மேற்படி எனது கட்டுரைக்கு யேர்மன் வன்னிக்கப்பல் திட்டத்தில் இயங்குகின்ற திரு.வலன்ரைன் குருசுமுத்து அவர்களால் எழுதப்பட்டது. இன்னும் சில கடிதங்கள் அவரால் எழுதப்பட்டுள்ளது.

Hallo Santhi!
Vannakam!!
Hier ist eine Gelegentheit für dich,etwas zu schreiben,oder zu helfen!
(Viel Blabla in Tamil bringt nicht viel für unsern Volk)
It was in a German Newspaper (can you remember,that you send me that Artical?)in your city,that you are a writer-authoress( Schriftstellerin),poetess (Dichterin),und Journalist (journalistin)so i think,you are a proper and suitable and qualified person to help this project,if you like please take contact with them,and work with them together!
If you like i will recomend you to them!
In Tamil we says "Karumpu kattoduirunthal erumpu thanai varum" so if we like to read your artical we lookafter and lookout,so why send your creations to "Unknownpersons"?
If i want to read some thing usefull,i will find out,please don't sent me your shit(Kacke) to me-Thanks!
Anpudan
Valentine

சாந்தி நேசக்கரம் said...

ஐயா வலன்ரைன் நீங்கள் இக்கடிதத்திலிருந்து கூற வரும் விடயம் என்ன ?

நீங்கள் எழுதும் ஆங்கிலம் யேர்மன் எழுத்துக்களைப் படிக்கும் அளவுக்கு எனது இரு மொழியிலும் ஓரளவு முடியும்.

உங்கள் ஆங்கில யேர்மன் புலமைகளுக்கு முன்னால் கல்லா நிதிகளான எங்களால் நின்று பிடிக்க இயலாதுதான். அத்தகையவர் நீங்கள்.

நீங்கள் தந்த தமிழ்ஸ்ஒபாமாவில் எனக்கும் நண்பர்கள் இருக்கிறார்கள். ஆக நீங்கள் சிபார்சு செய்ய சிரமப்படத் தேவையில்லை.

மேற்படி எனது கட்டுரை சொல்லப்பட்ட விடயங்கள் உங்களுக்கு அளவானவையாக இருந்தமைக்கு இத்தனை கோபமும் ஆவேசமும் உங்களுக்கு ஏற்பட்டது அதியசமாகத்தான் இருக்கிறது.

நீங்களெல்லாம் படித்த கலாநிதிகள் விமர்சனங்களையெல்லாம் வாங்கிக்கொண்டு உங்கள் சின்னத்தனமான சிந்தனைகள் பற்றி பெரியமனது பண்ணி யோசிப்பீர்கள் என்று நினைத்தேன். ஆனால் கலாநிதிகளுக்கேயுரிய தங்கள் சின்னத்தனத்தை பலதரம் நிரூபணமாக்குகிறீர்கள்.

சாந்தி நேசக்கரம் said...

கீழ்வரும் கடிதமானது மேற்படி எனது கட்டுரைக்கு வன்னிரெக்கின் அனைத்துலக தொடர்பாளரும் யேர்மன் வன்னிக்கப்பல் திட்டத்தில் இயக்குனருமான திரு.வலன்ரைன் குருசுமுத்து அவர்களால் எழுதப்பட்டது. (இது நான்காவது கடிதம்)

Thanks God!
People who love our nation and our tamil brothers and sisters have vision and pation and try to do the best without thinking about the failure and breakdown!
After the discharge the cargo the ship will be scrapping in some of the asien country to save the money!
I will be in touch with our lady writer-authoress( Schriftstellerin),poetess (Dichterin),und Journalist (journalistin) and give more informations,what is going on,thereafter she can write to our tamil readers the truth,not blabla!
Yes one thing more,there is a project "Schiff für Vanni",in Germany-i will support that,pleace join with them!Vanni Teck or Vanni Tech has nothing to do with this and nobody knows about this organisation. (First time i came to know from our lady)
But there is one TR-TEC in London! Lord Mayor Mrs.Pakiyasothi Elisabeth Mann,or Lisa mann,or Mann Acca in London support that for long time.
Another TECH-The Economic Consultancy House,foundet by late -Mamanithar-Prof.Dr.Thurairajah in Jaffan in 1992,with office in more than 20 Countries now under the leadership of Prof.Dr.Navaratnarajah,brother of Prof.Dr.late.Thurairajah-and they have nothing to do with politics
For your Information!!
To (one)
CC( 15)
BCC(only god knows- more than 650 Mails-because they all want to know about this LxxxxxC WxxxN )-because of this i write it in my bad english
Anpudan
Valentine

ஐயா கலாநிதி வலன்ரைன்,
இதிலிருந்து என்ன சொல்ல வருகிறீர்கள் ?

Anonymous said...

தோடா எங்கலிக்கு வெளங்கா விசியங்காளருக்கப்பு. உதின்னா பாசையப்பு ? பிளீஸ் தமிழ்ஸ்

Anonymous said...

வலன்ரைன் என்பவர் யார் ? புரியும்படியா சொல்லுங்கள் ? உங்கள் வலைப்பூவில் தமிழ்தான் வாசிக்க வருகிறோம். இருமொழிக்கலப்பு எதற்கு?
வரதா

நான் தான் புல நாய் said...

வலைன்ரைனிற்கு வாகீசனும்..அகிலனும் சொல்கிறதுதான் வேதவாக்கு..மே 17 ந்திகதி உலகத் தமிழரே சோகத்தில் மூழ்கியிருக்கும் போது.. ஜெர்மனிய புலிகளின் பொறுப்பாளர் வாகீசன் இளையோரமைப்பு காரர் ஒருவரின் திருமணத்தில் தண்ணியடித்துவிட்டு நடனமாடிக்கொண்டிருந்தாராம்..அதனால் ஆத்திரமடைந்த சிலர் அவரிற்கு கண்ணீரஞ்சலியும் அடித்து ஒட்டியிருந்தனர்..ஜெர்மனியில் இறுதியாய் சேர்த்த நான்கு மில்லியன் யுரோவையும் வாகீசனும்.. அகிலனும் சேர்ந்து அமுக்கப்போகிறதாய் கேள்வி.. வலைன்ரைன் தனக்கும் ஏதாவது கிடைக்கும் என்கிற நினைப்பிலை அவர்களோடு கூட்டு சேர்ந்து நிற்கிறது மட்டுமில்லாமல் அடுத்த கப்பல் வன்னிக்கு விடப்போறம் என்றும் பணம் சேர்க்கினமாம்.. அதுசரி ஒரு கேள்வி?? இப்ப வன்னியிலை யார் இருக்கிறார்கள் இவர்கள் கப்பல்விட.. இலங்கை இராணுவத்திற்கு பொருட்கள் சேர்த்து அனுப்ப் போகின்றார்களா???

Anonymous said...

சனத்தின்ரை காசிலை கலியாணம் கொண்டாட்டம் செய்து கொண்டிருக்கின அங்கை சனம் கம்பிவேலியுக்கை நிக்குதுகள்.
வன்னியில வலன்ரைனின்ரை கப்பலை ஏற்க ஆமிதான் நிக்குது. சனத்தை ஏய்ச்சுவாழ நல்லவழிதான் தேடுறாங்கப்பா.

Anonymous said...

http://www.schiff-fuers-vanni.de/

Anonymous said...

http://www.schiff-fuers-vanni.de/

thayavu seithu unkal paarvaiyai valantain enum thaninaparudanana kopathapankaloodaaka sluththaamal intha inaippinai sarivara paarththuviddu unkalaalum ethavathu
mudinththaal inainthu kollunkal.

vimarsanankal emathu iyalaamaiyin pulampalaka illathu valikaaddi karaisera kaipidithu koodichellavum varavendum.

Nanri

சாந்தி நேசக்கரம் said...

கனவிலிருந்து விழித்தெழுந்துள்ளது போல வந்திருப்பவருக்கு,
கோபிக்காதீர்கள் அனானி இரண்டுமாதம் முடிந்துவிட்டது மேற்படி கட்டுரை எழுதப்பட்டு. நீங்கள் இப்போது வந்து ஏதோ சமாதானப்புறாபோல பறக்கிறீர்கள்.

நீங்கள் குறிப்பிடுவது போல வலன்ரைன் என்பவருடன் எந்தவித தனிப்பட்ட குரோதங்களும் இல்லை. மேற்படி கட்டுரையானது உருத்திரகுமார் கூட்டணியை படித்தோர் எனத் தம்மை அடையாளம் இட்டுள்ளவர்களது புளிச்சல்தான் எழுதப்பட்டுள்ளது.

விமர்சனங்கள் இயலாமல் எழுதப்படுவதல்ல. நம்மை நாம் திரும்பிப்பார்க்க வேண்டுபவை.

உங்கள் முயற்சி வெற்றிபெற வாழ்த்துகிறேன்.

நன்றி.

சாந்தி நேசக்கரம் said...

அனானினப் பின்னூட்டமிடும் நண்பருக்கு,
தங்கள் மடலுக்கு நன்றிகள். நீங்கள் எழுதிய விடயங்கள் தொடர்பாக நாங்கள் மின்னஞ்சலில் பேசிக்கொள்ளலாம் என் நம்புகிறேன்.
எனது மின்னஞ்சல் இதோ குறிப்பிடுகிறேன்.
rameshsanthi@gmail.com
கட்டுரைக்கு அப்பால் பலதரப்பட்ட பக்கத்தில் நிற்கின்ற தங்கள் எழுத்துக்களை இம்மின்னஞ்சல் ஊடாக எழுதுங்கள்.

ஆரோக்கியமான கருத்துப்பரிமாற்றங்கள் சிறந்ததொரு ஒற்றுமையான பணிகளுக்கு உதவும் என நம்புகிறேன்.

சாந்தி